/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கபடி போட்டியில் வென்ற அணிக்கு பாராட்டு
/
கபடி போட்டியில் வென்ற அணிக்கு பாராட்டு
ADDED : பிப் 06, 2025 06:50 AM

வில்லியனுார்; மாநில அளவிலான கபடி போட்டியில், தங்க பதக்கம் வென்று சாதனை படைத்த புதுச்சேரி வீரர்களை முன்னாள் முதல்வர் பாராட்டினார்.
மத்தியபிரதேச மாநிலம் போலாலில், கடந்த 29ம் தேதி துவங்கி 31ம் தேதி வரையில், மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 16க்கும் மேற்பட்ட கபடி அணிகள் கலந்துகொண்டன.
புதுச்சேரி மாநில கபடி சங்க அணி வீரர்கள் பங்கேற்றனர். அவர்கள், பல்வேறு சுற்றுகள் விளையாடி, இறுதி போட்டில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தையும், தங்க பதக்கத்தையும் பெற்று, புதுச்சேரிக்கு பெருமை சேர்த்தனர்.
வெற்றி பெற்று திரும்பிய கபடி வீரர்கள், புதுச்சேரி மாநில கபடி சங்க தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திகேயன் தலைமையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
புதுச்சேரி சார்பில் விளையாடிய அனைத்து வீரர்களையும் அவர் கவுரவபடுத்தினார்.
கபடி சங்க நிர்வாகிகள் பெருமாள், ஜெயசீலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.