காமராஜர் நகர் தொகுதி மக்களுக்கு காங்., வேட்பாளர் தேவதாஸ் நன்றி
காமராஜர் நகர் தொகுதி மக்களுக்கு காங்., வேட்பாளர் தேவதாஸ் நன்றி
ADDED : மே 05, 2026 02:45 AM

புதுச்சேரி: காமராஜ் நகர் தொகுதி மக்களுக்கு புதுச்சேரி காங்., மூத்த துணை தலைவர், அகில இந்திய காங்., புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர், தேவதாஸ் நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
மக்கள் அளித்த இந்த தீர்ப்பு, என் மீதான உங்கள் நம்பிக்கையின் வெளிப்பாடாகும். என்மீது நம்பிக்கை வைத்து ஓட்டுப்போட்ட ஒவ்வொரு வாக்காளருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை ஆதரித்து இரவு பகல் பார்க்காமல் கடுமையாக உழைத்த காங்., கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
வெற்றி வாய்ப்பு மிகக் குறைந்த வாக்கு வி த்தியாசத்தில் தள்ளிப் போனாலும், நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் எனது பொறுப்பை மேலும் அதிகரிக்கிறது. அது மக்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமையை நினைவூட்டுகிறது. மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன். தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும், மக்களின் குரலாக நான் எப்போதும் இருந்து செயல்படுவேன். என்னை ஆதரித்த மக்களின் நம்பிக்கையை என்றும் காப்பாற்றுவேன். மக்கள் சேவையே என் அரசியல். மக்கள் முன்னேற்றமே என் இலக்கு' என்றார்.
