காங்., வேட்பாளர் கந்தசாமி கரிக்கலாம்பாக்கத்தில் ஓட்டு சேகரிப்பு
காங்., வேட்பாளர் கந்தசாமி கரிக்கலாம்பாக்கத்தில் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 05, 2026 06:38 AM

அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: ஏம்பலம் (தனி) தொகுதி காங்., வேட்பாளர் கந்தசாமி கரிக்கலாம்பாக்கத்தில் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
ஏம்பலம் (தனி) தொகுதி காங், வேட்பாளர் கந்தசாமி நேற்று கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அவரை அப்பகுதி மக்கள் மேளதாளங்களுடன் மாலை அணிவித்து வரவேற்றனர்.
ஓட்டு சேகரிப்பின் போது காங்., பிரமுகர்கள் கிருஷ்ணமூர்த்தி, நடராஜன், தி.மு.க., நிர்வாகிகள் கோவிந்தராஜ், பலராமன் மற்றும் கரிக்கலாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த காங்., தி.மு.க., வி.சி.,கம்யூ., கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
