காங்., வேட்பாளர் கந்தசாமிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு
காங்., வேட்பாளர் கந்தசாமிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு
ADDED : ஏப் 05, 2026 11:21 PM

நெட்டப்பாக்கம்: ஏம்பலம் தொகுதி காங்., வேட்பாளர் கந்தசாமி கரிக்கலாம்பாக்கம் மாஞ்சாலை பகுதி, கரிக்கலாம்பாக்கம் - வில்லியனுார் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அவரை அப்பகுதி மக்கள் மேள தாளங்களுடன் மாலை அணிவித்து, உற்சாக வரவேற்பு அளித்தனர். பின், ஓட்டு கேட்டு வந்த வேட்பாளர் கந்தசாமிக்கு ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து வாழ்த்தினர்.
வேட்பாளர் கந்தசாமி பேசுகையில், 'நான் அமைச்சராக இருந்தபோது தொகுதியை வளர்ச்சி பணியில் கொண்டு சென்றேன். காங்., தலைமையிலான கூட்டணி ஆட்சி கண்டிப்பாக அமையும். நான் அமைச்சராக வந்து தொகுதிக்கு நிறைய திட்டங்களை கொண்டு வருவேன்' என்றார்.
ஓட்டு சேகரிப்பின் போது காங்., - தி.மு.க., - வி.சி., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
