/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுய உதவிக்குழு பெண்களுக்கு ஆண்டிற்கு ரூ.50 ஆயிரம் மானியம் ஏம்பலம் காங்., வேட்பாளர் வாக்குறுதி
சுய உதவிக்குழு பெண்களுக்கு ஆண்டிற்கு ரூ.50 ஆயிரம் மானியம் ஏம்பலம் காங்., வேட்பாளர் வாக்குறுதி
சுய உதவிக்குழு பெண்களுக்கு ஆண்டிற்கு ரூ.50 ஆயிரம் மானியம் ஏம்பலம் காங்., வேட்பாளர் வாக்குறுதி
ADDED : ஏப் 03, 2026 11:07 PM

அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: சுய உதவிக்குழு பெண்களுக்கு ஆண்டிற்கு ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என ஏம்பலம் (தனி) தொகுதி காங்.,வேட்பாளர் கந்தசாமி வாக்குறுதி அளித்து ஓட்டு சேகரித்தார்.
ஏம்பலம் (தனி) தொகுதி காங்., வேட்பாளர் கந்தசாமி நேற்று கோர்காடு, சேலியமேடு பகுதிகளில் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது அவர், மகளிர் மனமகிழ் மன்றம் அமைக்கப்படும். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சிறப்பு கூறு நிதியில் இருந்து ஆண்டிற்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும், சேலியமேட்டில் அனைத்து சாலைகளும் சிமென்ட் சாலைகளாக மாற்றப்படும். பெண்களுக்கு நவீன கழிவறை கட்டித்தரப்படும். சமுதாயநலக்கூடம், கலையரங்கம், விளையாட்டு மைதானம் கட்டித்தரப்படும் என, வாக்குறுதி அளித்தார். பிரசாரத்தில் காங்., தி.மு.க., மற்றும் வி.சி., கட்சியினர் கலந்து கொண்டனர்.
