காங்., வேட்பாளர் செல்வம் சுத்துக்கேணியில் ஓட்டு வேட்டை
காங்., வேட்பாளர் செல்வம் சுத்துக்கேணியில் ஓட்டு வேட்டை
ADDED : ஏப் 01, 2026 07:51 PM

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதியில் இண்டி கூட்டணியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் செல்வம் சுத்துக்கேணியில் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.
மண்ணாடிப்பட்டு தொகுதியில் இண்டி கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்., வேட்பாளர் செல்வம் நேற்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சுத்துக்கேணி கிராமத்தில் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.
அப்போது, கிராம மக்கள் அரசின் நலத் திட்டங்களை பெற யாரை சென்று சந்திக்க வேண்டும் என, தெரியவில்லை என்றனர்.
அதற்கு, வேட்பாளர் செல்வம் தேர்தலில் தன்னை 'கை' சின்னத்தில் ஓட்டு அளித்து வெற்றி பெற செய்தால், அரசின் நலத்திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவதுடன், தங்களை நானே நேரில் சந்தித்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வேன் என உறுதியளித்தார்.
பிரசாரத்தின் போது இண்டி கூட்டணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
