காங்., வேட்பாளர் செல்வம் பி.எஸ்.பாளையத்தில் ஓட்டு சேகரிப்பு
காங்., வேட்பாளர் செல்வம் பி.எஸ்.பாளையத்தில் ஓட்டு சேகரிப்பு
ADDED : மார் 29, 2026 07:28 PM

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடும் இண்டி கூட்டணி காங்., வேட்பாளர் செல்வம் பி.எஸ்.பாளையத்தில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் இண்டி கூட்டணி சார்பில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் செல்வம், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நேற்று பி.எஸ்.பாளையம் கிராமத்தில் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, கிராம மக்கள் விவசாய பாசனத்திற்கான தண்ணீர் மற்றும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருவதாகவும், அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
மக்களின் கோரிக்கையை கேட்டறிந்த வேட்பாளர் செல்வம் தேர்தலில் தன்னை 'கை' சின்னத்தில் ஓட்டு அளித்து வெற்றி பெற செய்தால், விவசாய பாசனத்திற்கு அனைத்து நீர்வரத்து வாய்க்கால்களையும் உடனடியாக துார்வாரியும், குடிநீர் பிரச்னையை தீர்க்கவும் விரைந்து நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார்.
இதில், இண்டி கூட்டணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
