தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காங்., வேட்பாளர் ஷாஜகான் 'கை' சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு

 காங்., வேட்பாளர் ஷாஜகான் 'கை' சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு

 காங்., வேட்பாளர் ஷாஜகான் 'கை' சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு


ADDED : ஏப் 04, 2026 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 06:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காலப்பட்டு தொகுதி காங்., வேட்பாளர் ஷாஜகான் பெரியகாலப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியில் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

அவருக்கு மக்கள் திரண்டு ஆதரவு தெரிவித்து, மாலை அணிவித்து வரவேற்றனர்.

ஷாஜகான் பேசுகையில், 'இப்பகுதியில் குடிநீர் உப்பு தண்ணீராக மாறியுள்ளது. அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. நான் அமைச்சராக இருந்தபோது டேங் மூலம் குடிநீர் கொடுத்தேன்.

என்னை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் இரண்டு பேர் யார் என்று பாருங்கள். அவர்கள் வளர்ச்சி பணிகள் குறித்து பேசுகின்றனரா. நான் இருக்கும் போது இங்கு அமைதி இருந்தது. இங்கு அரிசி வழங் கப்படவில்லை, காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

காங்., ஆட்சிக்கு வந்தால் மீனவர்களை எஸ்.டி., பிரிவில் சேர்க்கப்பட்டு உங்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு ஏற் படுத்தி தருவோம். நீங்கள் அனைவரும் தெளிவாக இருந்து கை சின்னத்திற்கு ஓட்டு போட்டு என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us