காங்., வேட்பாளர் சிவசங்கர் உழவர்கரையில் ஓட்டு சேகரிப்பு
காங்., வேட்பாளர் சிவசங்கர் உழவர்கரையில் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 01, 2026 07:59 PM

புதுச்சேரி: உழவர்கரை தொகுதி காங்., வேட்பாளர் சிவசங்கர் பாரிஸ் நகர், திருநகர், பிச்சவீரன்பேட், ஆதிகேசவ நகர், காரை கோவிந்தன் நகர் ஆகிய பகுதிகளில் தீவிர ஓட்டு சேகரித்தார்.
அப்போது, அவர், பேசுகையில், நான் சுயேச்சை எம்.எல்.ஏ.,வாக தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். சி.எஸ்.ஆர்., மற்றும் சொந்த நிதியிலிருந்து தொகுதி முழுதும் 4,500க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் அமைத்துள்ளேன். எம்.பி., நிதி 2 கோடி ரூபாய் பெற்று சாலைகளை மேம்படுத்தியுள்ளேன். 21 கோவில்களை புனரமைத்துள்ளேன்.
கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் கொலை, கொள்ளை இல்லாத அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளேன். ஸ்மார்ட் சிட்டி நிதியில் பாவாணர் நகர் மக்களின் கோரிக்கையை ஏற்று இரண்டு சிறுவர் பூங்காக்கள் அமைத்து கொடுத்துள்ளேன். லேபர் சரவணன் நகரில் புதிதாக பல அடுக்குமாடி கட்டடங்கள் கட்டி ஒரு நகரையே உருவாக்கியுள்ளேன்.
புது நகரில் 4 கோடி செலவில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளது. பிச்சவீரன்பேட் பகுதியில் பட்டா வழங்காமல் இருந்த 59 வீடுகளுக்கு பட்டா வாங்கி கொடுத்துள்ளேன். ஏராளமான பணிகளை தொடர்ந்து தொகுதி மக்களுக்கு செய்து கொடுத்திட தன்னை வெற்றிபெற செய்யுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.
