தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காங்., வேட்பாளர் வைத்தியநாதன் லாஸ்பேட்டையில் ஓட்டு சேகரிப்பு

 காங்., வேட்பாளர் வைத்தியநாதன் லாஸ்பேட்டையில் ஓட்டு சேகரிப்பு

 காங்., வேட்பாளர் வைத்தியநாதன் லாஸ்பேட்டையில் ஓட்டு சேகரிப்பு


ADDED : மார் 29, 2026 04:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 04:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதி காங்., வேட்பாளர் வைத்தியநாதனை பொதுமக்கள் மலர் துாவி வரவேற்றனர்.

லாஸ்பேட்டை தொகுதி காங்., வேட்பாளர் வைத்தியநாதன், நெசவாளர் நகர், முத்து மாரியம்மன் கோவில் வீதி, கலைமகள் வீதி, செண்பகராமன் வீதி, மற்றும் மகாவீர் நகர் முழுதும் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அந்த பகுதியில் சாலைகளை தரம் உயர்த்தி சிமென்ட் சாலை அமைத்தற்கு அப்பகுதி மக்கள் வைத்தியநாதனுக்கு நன்றி தெரிவித்தனர். ஓட்டு சேகரிப்பின் போது வைத்தியநாதனை அப்பகுதி மக்கள் உற்சாகமாக மலர் துாவி வரவேற்றனர். பெண்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் திரளாக கலந்து கொண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதே சேவை தொடர வேண்டும் என்ற கோரிக்கையுடன், கை சின்னத்திற்கு வாக்களிக்க உறுதி தெரிவித்தனர். இந்த வரவேற்பால் உற்சாகமடைந்த வைத்தியநாதன், மக்கள் நலப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வேன் என்றும், பகுதிக்கு மேலும் பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவேன் என்றும் உறுதிய ளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us