காங்., வேட்பாளர் வைத்தியநாதன் குமரன் நகரில் ஓட்டு சேகரிப்பு
காங்., வேட்பாளர் வைத்தியநாதன் குமரன் நகரில் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 03, 2026 05:50 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதி காங்., வேட்பாளர் வைத்தியநாதன் குமரன் நகர் முழுதும் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.
லாஸ்பேட்டை தொகுதி காங்., வேட்பாளர் வைத்தியநாதன் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று 'கை' சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறார். இவருக்கு போகும் இடமெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், லாஸ்பேட்டை தொகுதி, குமரன் நகர் நான்கு வீதிகள், குமரன் நகர் விரிவு பகுதிகளில் காங்., வேட்பாளர் குமரன் வீடு வீடாக சென்று நேற்று ஓட்டு சேகரித்தார். அந்த பகுதி பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர்.
பின், அப்பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் சிமென்ட் சாலைகளாக மாற்றி கொடுத்த காங்., வேட்பாளர் வைத்தியநாதனுக்கு நன்றி தெரிவித்தனர்.
