காங்., வேட்பாளர் வைத்தியநாதனுக்கு லாஸ்பேட்டையில் உற்சாக வரவேற்பு
காங்., வேட்பாளர் வைத்தியநாதனுக்கு லாஸ்பேட்டையில் உற்சாக வரவேற்பு
ADDED : மார் 28, 2026 05:26 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதியில் காங்., கட்சி சார்பில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. மீண்டும் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுதும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
தொகுதிக்குட்பட்ட 'சாந்தி நகர், ரேணுகா பரமேஸ்வரி மூகாம்பிகை அம்மன் கோவிலில் வைத்தியநாதன் சிறப்பு பூஜை செய்து, தனது பிரசாரத்தை துவங்கி, ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பொன்னியம்மன் கோவில் வீதி, பூஞ்சோலை மாரியம்மன் கோவில் வீதி, புதுத்தெரு மெயின் ரோடு, பள்ளிக்கூடம் வீதி, குளக்கரை வீதி, பாவேந்தர் வீதி, நந்தா நகர், ஆனந்தா, நகர், கலைவாணி நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று, தனது தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி, 'கை' சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது, பொதுமக்களிடம் அந்தந்த பகுதியில் உள்ள குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து, வெற்றி பெற்றவுடன் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார்.
பிரசாரத்தின் போது, வேட்பாளர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., கமலா அறக்கட்டளை முதன்மை செயலாளர் ரமா ஆகியோரை பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், பிரமாண்ட மாலை மற்றும் சால்வை அணிவித்தும், மலர் துாவி, ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
