தொகுதி முழுவதையும் சமமாக பார்ப்பேன் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் உறுதி
தொகுதி முழுவதையும் சமமாக பார்ப்பேன் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் உறுதி
ADDED : ஏப் 03, 2026 05:20 AM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் நேற்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வேலன் நகர், ராகவேந்திரா நகர், தங்கவேல் கார்டன், வெங்கடேஸ்வரா நகர் மேற்கு பகுதிகளில் கை சின்னத்திற்க ஓட்டு சேகரித்தார்.
அப்பகுதி மக்கள், இந்த பகுதி அவரது தொகுதிக்கு உட்பட்டது என்பதே முதல்வருக்கு தெரியாது. அவர் எங்கள் பகுதிக்கு வந்ததே கிடையாது. வேலன் நகரில் பழைய சாலை மீதே புதிய சாலை போட்டதால் சாலையின் மட்டம் உயர்ந்தது. கடந்த மழைக்காலத்தில் மழைநீரும், கழிவுநீரும் வீடுகளுக்குள் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. அதற்கு எந்த நிவாரணமும் அரசு வழங்கவில்லை.
நீங்கள் முதல்வராகி இதனை உண்மையான முதல்வர் தொகுதியாக மாற்ற வேண்டும். மழைநீர் தேங்காத வகையில் வாய்க்கால் வசதி ஏற்படுத்த வேண்டும். இப்பகுதியில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை தடுக்க வெங்கடேஸ்வரா நகரில் புறக்காவல் நிலையம் அமைக்க வலியுறுத்தினர்.
கோரிக்கைகளை கேட்ட வேட்பாளர் வைத்திலிங்கம், வெற்றி பெற்றதும், தொகுதி முழுவதையும் சமமாக பார்ப்பேன். அனைத்து பகுதிக்கும் அடிப்படை வசதி செய்து கொடுப்பேன் என, உறுதி அளித்தார்.
