கட்சி பிரமுகரை வெளுத்து வாங்கிய காங்., வேட்பாளர்
கட்சி பிரமுகரை வெளுத்து வாங்கிய காங்., வேட்பாளர்
ADDED : மார் 28, 2026 05:13 AM
வில்லியனுார்: மனு வாபஸ் பெற கட்சி தலைமை நடத்திய பஞ்சாயத்தில், கட்சி நிர்வாகியை வேட்பாளர் புரட்டி எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இண்டி கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறி காரணமாக, காங்., கட்சியினர் 22 தொகுதிகளில் மனு தாக்கல் செய்தனர்.
இவர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால், தி.மு.க., - வி.சி.க., மற்றும் இந்திய கம்யூ., தங்கள் தொகுதிகளில் போட்டியிடும் காங்., வேட்பாளர்களை வாபஸ் பெற வலியுறுத்தியது.
அதனைத் தொடர்ந்து, காங்., தலைமை, நேற்று முன்தினம் பிரச்னைக்குரிய வேட்பாளர்களை அழைத்து பஞ்சாயத்து நடத்தியது.
அவ்வாறு, முதல்வர் போட்டியிடும் மங்கலமான தொகுதி நிர்வாகிகளை அழைத்து மாநில தலைவர் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து அந்த பகுதி நிர்வாகிகள் வேட்பாளரை தொடர்பு கொண்டு, அவசரமாக கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருமாறு கூறினர்.
கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்ற வேட்பாளர், அங்கிருந்த தங்கள் பகுதி நிர்வாகிகளை பார்த்து, இங்கு ஏன் வந்தீர்கள் என, ஆவேசமாக கேட்டார்.
அவரை சமாதானப்படுத்த முயன்ற நிர்வாகியை வேட்பாளர் தாக்க முயன்றார். அதனை தடுக்க முயன்ற மற்றொரு நிர்வாகியை, வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து தாக்கி புரட்டி எடுத்தனர்.
இதனை சற்றும் எதிர்பாராத மாநில தலைவர், விட்டா போதும் என, அருகில் இருந்த தனது அறைக்கு சென்று, கதவை மூடிக் கொண்டார். வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்களும் வெளியே சென்ற பின், அறையில் இருந்து வெளியே வந்த மாநில தலைவர், மற்ற நிர்வாகிகளிடம் இதை வெளியில் சொல்ல வேண்டாம். போலீசிலும் புகார் அளிக்க வேண்டாம் எனக் கூறி, ஆயக்கட்டியுள்ளார்.
இந்த சம்பவம், மங்லமான தொகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
