/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரெஸ்டோ பார் நடத்த அரசு பள்ளியை அகற்றும் முயற்சிக்கு காங்., கண்டனம்
/
ரெஸ்டோ பார் நடத்த அரசு பள்ளியை அகற்றும் முயற்சிக்கு காங்., கண்டனம்
ரெஸ்டோ பார் நடத்த அரசு பள்ளியை அகற்றும் முயற்சிக்கு காங்., கண்டனம்
ரெஸ்டோ பார் நடத்த அரசு பள்ளியை அகற்றும் முயற்சிக்கு காங்., கண்டனம்
ADDED : டிச 09, 2024 06:20 AM

புதுச்சேரி : ரெஸ்டோ பார் நடத்த சின்ன வீராம்பட்டினம் அரசு பள்ளியை இடித்து அகற்ற முற்படும் புதுச்சேரி அரசை காங்., மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., கண்டித்துள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரி, சின்ன வீராம்பட்டினத்தில் நல்ல நிலையில் உள்ள கட்டடத்தில் அரசு ஆரம்பப்பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளியை 2 கி.மீ., தொலைவிலான ஓடைவெளி அரசு பள்ளியோடு இணைக்கப் போவதாக கூறி, அப்பள்ளியை இடிக்க உள்ளதாக திடீரென அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதை கண்டித்து, சின்ன வீராம்பட்டினத்தைச் சார்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்மையில், சின்ன வீராம்பட்டினத்தில் பள்ளிக்கூடம் இருப்பதால் ரெஸ்டோ பார் நடத்த உரிமம் வழங்க இயலவில்லை. இதன் காரணமாகவே பள்ளி கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, அங்கு ரெஸ்டோ பார் ஏற்படுத்த அரசு, நடவடிக்கை எடுக்கிறது.
மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க வேண்டிய அரசு, பள்ளிக் கூடத்தையே இடித்து அகற்ற முற்படுவதை காங்., வன்மையாக கண்டிக்கிறது.
ஆகையால், மாணவர்கள் நலன் கருதி சின்ன வீராம்பட்டினத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்பப்பள்ளியை, வேறு ஊருக்கு மாற்றாமல் தொடர்ந்து அங்கேயே நடத்திட வேண்டும்.
மேலும், அங்கு ரெஸ்டோ பார் உள்ளிட்ட எவ்வித மதுக்கடைகளையும் புதிதாக திறக்க அரசு அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.