தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காங்.,- தி.மு.க.,தொகுதி பங்கீட்டில் இழுபறி: கட்சி மேலிட முடிவை ஏற்க முடிவு

 காங்.,- தி.மு.க.,தொகுதி பங்கீட்டில் இழுபறி: கட்சி மேலிட முடிவை ஏற்க முடிவு

 காங்.,- தி.மு.க.,தொகுதி பங்கீட்டில் இழுபறி: கட்சி மேலிட முடிவை ஏற்க முடிவு


UPDATED : மார் 15, 2026 06:13 AM

ADDED : மார் 15, 2026 04:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 15, 2026 06:13 AM ADDED : மார் 15, 2026 04:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று துவங்கிய காங்.,- தி.மு.க., கூட்டணி பேச்சுவார்த்தையில், எந்த முடிவும் எட்டாததால், இழுபறி நீடித்து வருகிறது.

தமிழகத்தில் தி.மு.க., - காங்., கூட்டணி உறுதியானது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரியிலும், இக்கூட்டணி தொடரும் என இரு கட்சி தலைமைகளும் உறுதி செய்தன.

இருப்பினும், புதுச்சேரியில் கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பதிலும், கடந்த தேர்தலைவிட வரும் தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதிலும் இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதன் காரணமாக கடந்த வாரம், புதுச்சேரிக்கு வருகை தந்த காங்., தேர்தல் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், நிர்வாகிகளிடம் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்திய பின், பேச்சுவார்த்தைக்கு, தி.மு.க.,வை அழைத்தனர்.

ஆனால், தி.மு.க.,வினர் பேச்சவார்த்தை எங்கள் தலைமையில், எங்கள் அலுவலகத்தில் தான் நடக்கும் என்றனர். இதனால், அன்று பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. பின்னர், காங்., தேர்தல் பொறப்பாளர், தி.மு.க.,வுடன் பேச்சுவார்த்தை நடத்த மாநில தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து விட்டு டில்லி புறப்பட்டு சென்றார்.

ஒருவழியாக இரு கட்சிகளுக்கிடையே நேற்று இரவு 7:00 மணிக்கு தனியார் ஓட்டலில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, காங்., தலைவர் வைத்திலிங்கம் தலைமையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன், எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன், மூத்த தலைவர் தேவதாஸ் ஆகியோர் சரியாக மாலை 6:45 மணிக்கு தனியார் ஓட்டலுக்கு வந்தனர்.

ஒரு மணி நேரத்திற்கு பின். தி.மு.க., மாநில பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் தலைமையில், மாநில அமைப்பாளர் சிவா, அவைத் தலைவர் சிவக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி ஆகியோர் இரவு 7:45 மணிக்கு பேச்சு வார்த்தைக்கு வந்தனர்.

அதனைத் தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு துவங்கிய பேச்சு வார்த்தை, இரவு 8:50 மணிக்கு எவ்வித முடிவும் எட்டாமல், நிறைவு பெற்றது. கூட்டத்தில் இருந்து வெளியே வந்த ஜெகத்ரட்சகனிடம் இதுகுறித்து கேட்டதற்கு, பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது. தொகுதி பங்கீடு, தொகுதி ஒதுக்கீடுகளை இரு கட்சிகளின் தலைமை முடிவு செய்யும் எனக் கூறினார்.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட காங்., - தி.மு.க., கூட்டணி பேச்சுவார்த்தை எவ்வித முடிவும் எட்டாமல், தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

ஒற்றுமையுடன் செயல்படுவோம் இதுகுறித்து இருகட்சி வட்டாரத்தில் விசாரித்போது, காங்., தரப்பில், தி.மு.க.,வை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளனர். இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. வரும் தேர்தலில் எதிரணி பண பலத்துடன் வலிமையாக உள்ளது. அதனால், நாம் வெற்றி இலக்கை அடையை, நமக்குள் 'ஈகோ' இன்றி, விட்டுக் கொடுத்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றோம். அதனையே தி.மு.க.,வினரும் வலியுறுத்தினர்.

கூடுதல் தொகுதி இருப்பினும், கடந்த 2016 மற்றும் 2021 தேர்தல்களில் நாங்கள் முறையே 21 மற்றும் 15 தொகுதிகளில் போட்டியிட்டோம். அதேபோன்று வரும் தேர்தலிலும் கூடுதல் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

சரிபாதி தொகுதி: தி.மு.க., தரப்பில், இண்டி கூட்டணிக்கு நாம் இணைந்து செயல்பட வேண்டும். அதனால், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்தது போக மீதமுள்ள தொகுதிகளை நாம் இருவரும் சமமாக பிரித்துக் கொள்ளலாம். மேலும், கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளை அந்தந்த கட்சிகளே இம்முறையும் போட்டியிடலாம். கூட்டணி தலைமையை நம் இரு கட்சிகளின் தலைமை முடிவை ஏற்கலாம் என்றனர்.

தி.மு.க.,வின் கருத்தை கேட்ட காங்., கட்சியினர் இதுகுறித்து கட்சி மேலிடத்தில் கலந்து பேசி, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தாலாம் எனக் கூறினர். அதனை தி.மு.க.,வினரும் ஏற்றுக் கொண்டனர்.

மீண்டும் நாளை பேச்சுவார்த்தை காங்., கட்சியினர், அக்கட்சி மேலிடத்தின் கருத்தை கேட்டு கூறியதும் நாளை 16ம் தேதி மீண்டும் இரு கட்சியினரும் கூடி தொகுதி பங்கீட்டை முடிவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தி.மு.க.,வுடன் ஆலோசனை: காங்., கட்சியுடன் பேச்சுவார்த்தை முடிந்த பின், தி.மு.க., வினரை கூட்டணி கட்சிகளான கம்யூ., வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தே.மு.தி.க., ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ராஜிவ் சதுக்கும் அருகே உள்ள ஓட்டலில் சந்தித்து பேசினர்.

மாப்பிள்ளை வீட்டார் லேட்டாதான் வருவார்கள் தி.மு.க,வை பேச்சுவார்த்தைக்கு அழைத்த காங்., கட்சியினர் கூறியபடி மாலை 6:45 மணிக்கு தனியார் ஓட்டலுக்கு வந்து காத்திருந்தனர். ஆனால், இரவு 7;45 மணி வரை தி.மு.க.,வினர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதுகுறித்து காங்., நிர்வாகிகளிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள், நாங்கள் (காங்.,) பெண் வீட்டார் சீக்கிரம் வந்துவிட்டோம், அவர்கள் (தி.மு.க.,) மாப்பிள்ளை வீட்டார். சற்று லேட்டாகத்தான் வருவார்கள் என்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us