/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடல் அரிப்பை தடுக்க கோரி காங்., மீனவர் அணி ஆர்ப்பாட்டம்
/
கடல் அரிப்பை தடுக்க கோரி காங்., மீனவர் அணி ஆர்ப்பாட்டம்
கடல் அரிப்பை தடுக்க கோரி காங்., மீனவர் அணி ஆர்ப்பாட்டம்
கடல் அரிப்பை தடுக்க கோரி காங்., மீனவர் அணி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 13, 2024 06:58 AM

பாகூர் : மூ.புதுக்குப்பம், நரம்பை, பனித்திட்டு மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க துாண்டில் வளைவு மற்றும் தடுப்பு சுவர் அமைக்க கோரி காங்., மீனவர் பிரிவில் சார்பில்ஆர்ப்பாட்டம் நடந்தது.
கன்னிக்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, காங்., மீனவரணி போத்திராஜ், பாஸ்கர் ஆகியோர் தலைமை தாங்கினார்.
ஆறுமுகம், காங்கேயன், புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக, காங்., மாநில தலைவர் வைத்தியலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,அனந்தராமன், பாலன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், மூ.புதுக்குப்பம், நரம்பை, பனித்திட்டு மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க துாண்டில் வளைவு மற்றும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். கடல் எல்லை குறித்து மத்திய அரசு தயாரிக்கும் வரைபடம் குறித்து மீனவர்களிடம் கருத்துக்களை கேட்டு அறிய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
வட்டார காங்., தலைவர் கோபு, பொதுச் செயலாளர் மணிவாளன், அன்பழகன், மோகன்தாஸ், அமுதரசன், கோவிந்தன், மூர்த்தி, பிரபாகரன், பீமாராவ் ராம்ஜி, அரிக்கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.