ADDED : ஆக 14, 2026 11:44 PM
புதுச்சேரி: அகில இந்திய காங்., தலைவர் அவமதிக்கும் செயலில் ஈடுப்பட்ட பா.ஜ., வினர் மீது, முத்தியால்பேட்டை காங்., பொறுப்பாளர் ஈரம் ராஜேந்திரன் முத்தியால்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
அகில இந்திய காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை இழிவுபடுத்தும் மற்றும் அவமதிக்கும் நோக்கத்துடன் உத்ரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ., வின் மேற்கொண்ட செயலை கண்டித்து முத்தியால்பேட்டை காங்., சார்பில், முத்தியால்பேட்டை தொகுதி பொறுப்பாளர் ஈரம் ராஜேந்திரன் தலைமையில், கட்சி நிர்வாகிகளுடன் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மனுவில், இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமையையும் கண்ணியத்தையும் உறுதி செய்கிறது.
அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒருவரை அவரது சமூக அல்லது மத அடையாளத்தின் அடிப்படையில் இழிவுபடுத்தும் செயல்களுக்கு இடமளிக்கக் கூடாது. இந்த புகாரை பரிசீலித்து, உண்மை நிலையை விசாரித்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கு வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
