தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலை விபத்தில் காங்., பிரமுகர் பலி

சாலை விபத்தில் காங்., பிரமுகர் பலி

சாலை விபத்தில் காங்., பிரமுகர் பலி


ADDED : அக் 15, 2024 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 15, 2024 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உழவர்கரையில் டூவீலர் நேருக்கு நேர் மோதியதில் காங்., பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.

புதுச்சேரி உழவர்கரை விவேகானந்த வீதியைச் சேர்ந்தவர் தாண்டவம் 61, உழவர்கரை தொகுதி காங்., பிரமுகர். இவர் நேற்று இரவு 10 மணிக்கு தனது ஸ்கூட்டியில் மூலகுளத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்று சாலையை கடக்க முயன்றார். அப்போது ரெட்டியார்பாளையத்தில் இருந்து வேகமாக பைக்கில் வந்த ஒருவர், தாண்டவம் ஸ்கூட்டி மீது மோதியது. அதில் துாக்கி வீசப்பட்ட தாண்டவத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். விபத்து குறித்து போக்குவரத்து வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us