/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்தியால்பேட்டை தொகுதியில் காங்கிரசார் நடைபயணம்
/
முத்தியால்பேட்டை தொகுதியில் காங்கிரசார் நடைபயணம்
ADDED : மே 25, 2025 04:51 AM

புதுச்சேரி : முத்தியால்பேட்டை தொகுதி வட்டார காங்., சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு முத்தியால்பேட்டை தொகுதி காங்., பொறுப்பாளர் ஈரம் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நடை பயணத்தை மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அகில இந்திய காங்., கமிட்டியின் புதுச்சேரிக்கான ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், மாநில காங்., செயலாளர் சரவணன், காங்., வழக்கறிஞர் அணி தலைவர் மருதுபாண்டியன், முன்னாள் கவுன்சிலர் குமரன் உட்பட பலர் பங்கேற்றனர். காங்., மாவட்ட, வட்டார நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முத்தியால்பேட்டை மார்கெட் அருகில் தொடங்கிய நடைபயணத்தில், சுத்தமான குடிநீர், பொது மற்றும் தனியார் பொது கழிப்பிடம் மேம்படுத்துதல், சாலைகளை பழுது நீக்கம் வேண்டும்.
ஆரம்ப சுகாதார மேம்பாடு, அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும். இளைஞர்களுக்கு தொழிற்கல்வி வாய்ப்பு, குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு குறைந்த விலையில் வீடுகள், வீட்டு மனைப்பட்டா இல்லாதாவர்களுக்கு வீடு மனைப்பட்டா, தொகுதி முழுவதும் மழைநீர் வடிகால் வாய்கால் அமைப்பது, மீனவர்களுக்கு துாண்டில் முள் வளைவு அமைத்து தருவது, பசுமை இடங்களை பாதுகாப்பது, சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவது, தொகுதி முழுவதும் சுழற்சி முறையில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் உள்ளிட்ட 26 கோரிக்கைகள் வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டனர்.