/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., எம்.எல்.ஏ.க்கள் இருவர் கட்சியில் உள்ளனரா? வைத்திலிங்கத்துக்கு அன்பழகன் கேள்வி
/
காங்., எம்.எல்.ஏ.க்கள் இருவர் கட்சியில் உள்ளனரா? வைத்திலிங்கத்துக்கு அன்பழகன் கேள்வி
காங்., எம்.எல்.ஏ.க்கள் இருவர் கட்சியில் உள்ளனரா? வைத்திலிங்கத்துக்கு அன்பழகன் கேள்வி
காங்., எம்.எல்.ஏ.க்கள் இருவர் கட்சியில் உள்ளனரா? வைத்திலிங்கத்துக்கு அன்பழகன் கேள்வி
ADDED : பிப் 01, 2024 05:06 AM

புதுச்சேரி: காங்., எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருக்கின்றனரா என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம், மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நடந்தது. அவைத்தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில்மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:
காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., அ.தி.மு.க., வைப் பற்றி அவதுாறாக பேசியது கண்டிக்கத்தக்கது. அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிக்காத முன்பே தோல்வி பயத்தில்வைத்திலிங்கம் உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளார். காங்., கட்சியை ஒரு தீண்டத்தகாத கட்சியாக தி.மு.க., வினர் விமர்சித்து வருகின்றனர்.
காங்., சீட்டுக்காக எங்களிடம் அறிவாலயத்தில் கையெந்தி நிற்கின்றனர் என,தி.மு.க., அமைச்சர் கண்ணப்பன் புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக பேசினார். அதை கண்டிக்க காங்., தலைவர் முன்வரவில்லை. முதல்வர் நாராயணசாமியை சகட்டு மேனிக்கு வசை பாடினர். அப்போதும்வைத்திலிங்கம்எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அவர் எங்களைப் பற்றி பேசுவதற்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை.
காங்., எம்.எல்.ஏ.க்கள் இருவர் கட்சியில் தான் இருக்கின்றனரா அல்லது முதல்வர் ரங்கசாமியின் அரவணைப்பில் உள்ளனரா என்பதை முன்னாள் முதல்வர் நாராயணசாமியிடம் வைத்திலிங்கம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.
லோக்சபா தேர்தலில் புதுச்சேரியில் அ.தி.மு.க. ,நிச்சயமாக போட்டியிடும். முரண்பாடான கொள்கைகள் கொண்ட தி.மு.க., - காங்., கூட்டணி படுதோல்வியடையும்.
இவ்வாறுஅவர் பேசினார்.