/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதுபான ஆலை அனுமதி விவகாரம் சி.பி.ஐ., விசாரிக்க கவர்னரிடம் காங்., மனு
/
மதுபான ஆலை அனுமதி விவகாரம் சி.பி.ஐ., விசாரிக்க கவர்னரிடம் காங்., மனு
மதுபான ஆலை அனுமதி விவகாரம் சி.பி.ஐ., விசாரிக்க கவர்னரிடம் காங்., மனு
மதுபான ஆலை அனுமதி விவகாரம் சி.பி.ஐ., விசாரிக்க கவர்னரிடம் காங்., மனு
ADDED : ஜன 23, 2025 05:23 AM

புதுச்சேரி: புதிய மதுபான ஆலை துவங்க ஆளும் அரசு பல கோடி லஞ்சம் பெற்றதால், சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என கவர்னரிடம் காங்., புகார் மனு அளித்தது.
புதுச்சேரி மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஷாஜகான், காங்., சீனியர் துணை தலைவர் தேவதாஸ் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், உள்ளிட்டோர் நேற்று கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து மனு அளித்தனர்.
பின், முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது;
புதுச்சேரியில் கடந்த 2 ஆண்டிற்கு முன்பு 6 மதுபான ஆலை அமைக்க அனுமதி கோரினர்.
அப்போதைய கவர்னர் தமிழிசை அதற்கு அனுமதி அளிக்கவில்லை.கவர்னர் அனுமதியின்றி மதுபான ஆலைக்கு பி.பி.ஏ., தொழில்துறை முதற்கட்ட அனுமதி கொடுத்துள்ளது.
அந்த கோப்பிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததால், கடந்த 15 நாட்களுக்கு முன் மறுபடியும் அமைச்சரவையில் வைத்து 8 மதுபான ஆலை அமைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. விதிமீறல், வெளிப்படை தன்மை இல்லை, ஊழல் நடந்துள்ளதால் கவர்னரிடம் மனு அளித்துள்ளோம்.
ஏனாம் நபர், காரைக்காலில் 2 பா.ஜ.வினர்,புதுச்சேரியில் ஒருவர்,சென்னையைச் சேர்ந்த ஒருவர் என பலருக்கு அனுமதி கொடுத்துள்ளனர் என கூறினார்.