தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கிருஷ்ணா நகரில் பாதாள சாக்கடை அமைக்க கோரி காங்., ஆர்ப்பாட்டம்

 கிருஷ்ணா நகரில் பாதாள சாக்கடை அமைக்க கோரி காங்., ஆர்ப்பாட்டம்

 கிருஷ்ணா நகரில் பாதாள சாக்கடை அமைக்க கோரி காங்., ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 13, 2026 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2026 06:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதி, கிருஷ்ணா நகரில், நேற்று காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். மூத்த துணை தலைவர் தேவதாஸ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாநில தலைவர் வைத்திலிங்கம் பேசுகையில்,

கிருஷ்ணா நகரில், சாலை வசதி இல்லாமலும், குடிநீர் சரியாக வராமல் இருக்கிறது. கழிவுநீர் செல்லும் வாய்க்கால் வசதியில்லாமல், மழை நேரங்களில், தண்ணீர் சாலையில் தேங்கி நிற்கிறது.

இந்த ஆண்டு சரியாக மழை பெய்ய வில்லை. கன மழை பெய்தால், கிருஷ்ணா நகரில் வீட்டில் மழைநீர் புகுந்து, வீட்டு பொருட்கள் சேதமாகியிருக்கும்.

மழை நீர் வடிவதற்கு பைப் லைன் போடப்பட்டு, மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றப்படுகிறது என தொகுதி எம்.எல்.ஏ., கூறியுள்ளார்.

ஆனால், அதற்கான எந்த வசதியும் செய்யவில்லை. அதே போன்று சாமிபிள்ளை தோட்டத்தில் உள்ள வெள்ளவாரி வாய்க்காலின் கரையை உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை.

ரங்கசாமி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், பா.ஜ., பின்னால் நிற்கின்றார். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், புதுச்சேரியில், வரும் தேர்தலில் 30 தொகுதியில் வேட்பாளரை நிறுத்துவதாக கூறி வருகிறார். முதல்வர், உள்துறை அமைச்சர், சபாநாயகரை எதிர்த்து, வேட்பாளரை நிறுத்துங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us