லிங்காரெட்டிப்பாளையத்தில் காங்., செல்வம் ஓட்டு சேகரிப்பு
லிங்காரெட்டிப்பாளையத்தில் காங்., செல்வம் ஓட்டு சேகரிப்பு
ADDED : மார் 29, 2026 04:04 AM

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில், மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடும் இண்டி கூட்டணி, காங்., வேட்பாளர் செல்வம் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, நேற்று தொகுதிக்குட்பட்ட லிங்காரெட்டிப்பாளையம் பகுதிகளில் வேட்பாளர் செல்வம் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில், காங்., மேலிட பார்வையாளர் மோகன் குமாரமங்கலம், அசோக் ஆகியோர் பங்கேற்று வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து ஓட்டு சேகரித்தார்.
ஓட்டு சேகரிப்பின் போது, வேட்பாளர் செல்வம் தேர்தலில் 'கை' சின்னத்தில் ஓட்டு அளித்து தன்னை வெற்றி பெற்ற செய்தால், தொகுதி மக்களின் பிரச்னைகளை நேரில் கேட்டறிந்து உடனடியாக நிவர்த்தி செய்வேன் என, உறுதியளித்தார்.
இதில், இண்டி கூட்டணி நிர்வாகிகள் சுரேஷ், முத்துரங்கம், அரிபுத்திரி, ஞானசேகரன், பூங்காவனம், செந்தில்குமார், செந்தில்வேலன், ரகுபதி, அருள், பெருமாள் உட்பட பலர் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
