தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'பெஸ்ட் புதுச்சேரி' திட்டம் தோல்வி அடைந்துவிட்டது: பா.ஜ., மீது காங்., செய்தி தொடர்பாளர் காட்டம்

 'பெஸ்ட் புதுச்சேரி' திட்டம் தோல்வி அடைந்துவிட்டது: பா.ஜ., மீது காங்., செய்தி தொடர்பாளர் காட்டம்

 'பெஸ்ட் புதுச்சேரி' திட்டம் தோல்வி அடைந்துவிட்டது: பா.ஜ., மீது காங்., செய்தி தொடர்பாளர் காட்டம்


ADDED : பிப் 03, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 04:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பா.ஜ.,வின் 'பெஸ்ட் புதுச்சேரி' தோல்வியடைந்து விட்டது என காங்., செய்தி தொடர்பாளர் டாலி சர்மா தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

பணி நிரந்தரம் கோரி 13 நாட்களாக 292 ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுடன் போராடி வருகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்வதாக கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். அவர்களை முதல்வரும் சந்திக்காமல் உள்ளார். இதேபோல் கொரோனா காலத்தில் பணியாற்றிய 400க்கும் மேற்பட்ட நர்ஸ்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதாரத்துறையில் பெரிய ஊழல் நடந்துள்ளது. போலி மருந்து விவகாரத்தில் ரூ.10 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்துள்ளது. போலி மருந்து விவகாரத்தில் சிக்கியவருக்கு ரூ.100 கோடி வங்கி கடன் பெற்றுத் தர, சபாநாயகர் டில்லிக்கு அழைத்து சென்றுள்ளார். சந்தனக்கட்டை ஊழலில் மற்றொரு அமைச்சர் ஈடுபட்டுள்ளார். கோவில் நிலத்தை அபகரித்தவருக்கு அமைச்சர் பதவியை பா.ஜ., வழங்கியுள்ளது. பொதுப்பணித் துறையில் 30 சதவீதம் கமிஷன் பெறப்படுகிறது. இது ஊழல் அரசு.

புதுச்சேரியில் பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை ஒன்றைக்கூட பா.ஜ., அரசு ஏற்படுத்தவில்லை. புதுச்சேரியில் பாதாள சாக்கடை திட்டம் மிக மோசமான நிலையில் உள்ளது.

இப்பிரச்னைகளுக்கு தற்போதைய அரசு டில்லி கட்டுப்பாட்டில் இயங்குவதே காரணம்., மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்படவில்லை. கவர்னர்தான் ஆட்சி செய்கிறார். ஏழை மக்களுக்காக பா.ஜ., செயல்படுவதில்லை. தொழிலதிபர்கள்தான் இவர்களின் நண்பர்கள். வேலைவாய்ப்பின்மை, மோசமான மருத்துவமனைகள் இவர்களின் மோசமான செயல்பாட்டுக்கு உதாரணம்.

அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்கவில்லை. தேவையற்ற வரிகளால் சிறு தொழில்கள் மூடப்படுகின்றன. பா.ஜ., அறிவித்த 'பெஸ்ட் புதுச்சேரி' தோல்வி அடைந்துவிட்டது. அனைத்து துறைகளின் நிலையும் அப்படிதான் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us