/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'தீவிரவாதத்தை முழுமையாக அழிக்க வேண்டும்' காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., பேட்டி
/
'தீவிரவாதத்தை முழுமையாக அழிக்க வேண்டும்' காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., பேட்டி
'தீவிரவாதத்தை முழுமையாக அழிக்க வேண்டும்' காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., பேட்டி
'தீவிரவாதத்தை முழுமையாக அழிக்க வேண்டும்' காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., பேட்டி
ADDED : மே 15, 2025 02:34 AM

புதுச்சேரி: ஆபரேஷன் சிந்துாரில், ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி, அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், புதுச்சேரி காங்., சார்பில், ஊர்வலம் நடந்தது.
மாநில காங்., வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஊர்வலம் அண்ணா சிலையில் இருந்து புறப்பட்டு, அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சென்று சட்டசபை அருகே நிறைவடைந்தது.
பின், வைத்திலிங்கம் எம்.பி., கூறியதாவது;
பாக்., தீவிரவாதிகளை அடக்கிய இந்திய ராணுவம் ஆற்றிய பணிக்கு, காங்., சார்பில், பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம். வரும் காலத்தில் தீவிரவாதிகளால் தலையெடுப்பு ஏற்பட்டால் அவர்களை அடக்க அனைத்து வலிமையும் ராணுவத்திற்கு தரவேண்டும்.
ராணுவம் தங்களின் திறமையை முழுமையாக காட்டும் வேளையில், போரை பாதியில் நிறுத்தியதை, வன்மையாக கண்டிக்கிறோம். தீவிரவாதத்தை முழுமையாக அழிக்க வேண்டும் என்பது தான் இந்திய மக்களின் நிலைபாடு.
புதுச்சேரியில், பிளஸ் 2 சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இந்தாண்டு, 88 சதவீதத்திற்கு கீழ் தேர்ச்சி சென்றுள்ளது. கல்லுாரிகளில் சேரும் மாணவர்களுக்கு அனுமதி கிடைக்கும் வரை, வருவாய்த்துறை மூலம் அனைத்து சான்றிழ்களை வழங்குவதற்கு, கால தாமதமாகும் என்பதால், பழைய சான்றிதழ்களை ஏற்று கொள்ளவதற்கான வழிமுறையை வருவாய்த்துறை அறிவிக்க வேண்டும்' என்றார்.
ஊர்வலத்தில், சீனியர் தலைவர் மணி, காங்., வழக்கறிஞர் அணி தலைவர் மருதுபாண்டியன், இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு, மகளிர் காங்., தலைவி நிஷா, முன்னாள் கவுன்சிலர் குமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.