தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காங்., மாநில செயலாளர் பிறந்த நாள் விழா

 காங்., மாநில செயலாளர் பிறந்த நாள் விழா

 காங்., மாநில செயலாளர் பிறந்த நாள் விழா


ADDED : பிப் 07, 2026 03:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 03:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: காங்., மாநில செயலாளரும், ஏம்பலம் தொகுதி சமூக சேவகருமான மோகன்தாஸ் பிறந்த நாள் விழா, கிருமாம்பாக்கத்தில் நடந்தது.

விழாவையொட்டி, நேற்று காலை நேரு நகர் விநாயகர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில், மோகன்தாஸ் குடும்பத்துடன் தரிசனம் செய்தார். அவரது குல தெய்வ கோவிலான கிருமாம்பாக்கம் முன்னடிவீரன் கோவில், கிருமாம்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில், முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

கலை குழுவினரின் வரவேற்புடன், மோகன்தாசை அவரது ஆதரவாளர்கள் ஊர்வலகமாக கிருமாம்பாக்கம் விழா மேடைக்கு அழைத்து வந்தனர். அங்கு, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில், கட்சி நிர்வாகிகள் முன்னிலையில், மோகன்தாஸ் கேக் வெட்டி , பிறந்த நாளை கொண்டாடி, பொது மக்களுக்கு வேட்டி, சேலை வழங்கினார்.

காங்., தெற்கு மாவட்ட தலைவர் குமரேஸ்வரன், பொதுச் செயலாளர்கள் இளையராஜா, சிவசண்முகம், மருதுபாண்டி, செயலாளர்கள் ரகுபதி, கனிக்கண்ணன், குமரன், செந்தில்குமார், நாக சத்யா, இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு, மாநில பொதுச் செயலாளர் சசிதரன், சையத், பஞ்சாயத்து ராஜ் மாநில துணை தலைவர் பாஸ்கர், எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தலைவர் ஜெயபால், செயல் தலைவர் முருகன், ஈரம் பவுண்டேஷன் ராஜேந்திரன், வட்டார தலைவர்கள் ராஜூபாபு, ராஜ்மோகன், ஜெரால்டு உட்பட பலர் மோகன்தாஸிற்கு, புத்தகங்கள், மரக்கன்றுகள், எழுது பொருட்களை வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us