தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த காங்., வலியுறுத்தல்

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த காங்., வலியுறுத்தல்

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த காங்., வலியுறுத்தல்


UPDATED : நவ 27, 2026 06:17 PM

ADDED : நவ 27, 2026 06:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 06:17 PM ADDED : நவ 27, 2026 06:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ப ுதுச்சேரி: புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காங்., மாநில செயலாளர் விஜயலட்சுமி ஜெயமூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை; மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நுாற்றுக்கணக்கானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலில் நான்கு பேர் இறந்தது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. மழைக் காலம் துவங்கிய நிலையில், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் புதுச்சேரி அரசு மெத்தனம் காட்டி வருகிறது. பல இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமலும், கழிவுநீர் கால்வாய்கள் துார்வாரப்படாமலும் இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

அனைத்து தொகுதிகளிலும் கொசு மருந்து தெளிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு வார்டுகள் அமைத்து, போதுமான மருந்துகள், படுக்கை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். வீடு வீடாக சென்று நிலவேம்பு குடிநீர் வழங்கி, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளவும் வேண்டும். உயிர் பலியை தடுத்திட புதுச்சேரி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us