/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொகுதி வளர்ச்சி பணிகள் ஆலோசனைக் கூட்டம்
/
தொகுதி வளர்ச்சி பணிகள் ஆலோசனைக் கூட்டம்
ADDED : மே 22, 2025 03:33 AM

புதுச்சேரி:உப்பளம் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் எம்.எல்.ஏ., அலுவகலத்தில் நடந்தது.
அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். புதுச்சேரி நகராட்சி உதவி பொறியாளர் யுவராஜ், இளநிலை பொறியாளர் சண்முகம், ஆய்வாளர் ரவிச்சந்திரன், மத்திய சாலை மற்றும் கட்டடம் துறை இளநிலை பொறியாளர் சிவாபிரகாசம், குடிநீர் கோட்டம் பொது பணித் துறை இளநிலை பொறியாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், டாக்டர் அம்பேத்கர் சாலை கோலாஸ் நகர் - நேதாஜி நகர் இணைப்பில் அமைந்துள்ள உப்பனாறு பாலம் ரூ.90 லட்சம் செலவில் அகல்படுத்தும் பணி துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாணரப்பேட்டை பகுதியில் உள்ள அலேன் வீதி, நேரு வீதி, பெருமாள் ராஜா வீதி, காளியம்மன் தோப்பு, முருகசாமி தோப்பு, சின்ன எல்லையம்மன் கோவில் வீதி, சித்தி விநாயகர் கோவில் வீதி, கஸ்துாரிபாய் வீதி, காமராஜர் வீதி, அப்துல்கலாம் வீதிகளில், குடிநீர் இணைப்பு கொடுத்து, வாய்க்கால்களை சீரமைத்து சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் ஒத்துழைப்பு தருமாறு அனிபால்கென்னடி எம்.எல்.ஏ., கேட்டுக் கொண்டார்.
தொகுதி செயலாளர் சக்திவேல், காங்., உறுப்பினர் ராஜ்குமார், தி.மு.க., தொகுதி துணை செயலாளர் ராஜி, கிளை செயலாளர் ராகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.