/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொகுதி வளர்ச்சி பணிகள்: எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை
/
தொகுதி வளர்ச்சி பணிகள்: எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை
தொகுதி வளர்ச்சி பணிகள்: எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை
தொகுதி வளர்ச்சி பணிகள்: எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை
ADDED : பிப் 05, 2025 10:36 PM

புதுச்சேரி; புதுச்சேரி நகராட்சி ஆணையரை, எதிர்க்கட்சி தலைவர் சிவா சந்தித்து, தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது, வில்லியனுார் தொகுதி, கொம்பாக்கம் பேட், குப்பம் பேட் பகுதிகளில், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் சுடுகாடு கொட்டகை, தகன மேடை மற்றும் மதில் சுவர் அமைத்தல், பொதுக்கழிப்பிடம் திறத்தல், புதுநகர், அண்ணா நகர், பாலாஜி நகர், அமிர்தம்மாள் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், புதிதாக சாலை அமைக்க வேண்டும், ஒட்டம்பாளையம், கொம்பாக்கம் சுடுகாட்டிற்கு மதில் சுவர் அமைத்து தர வேண்டும்.
புதிய குப்பை தொட்டிகள் அமைத்து, தீவிர துப்புரவு பணி மேற்கொள்ள வேண்டும். செட்டிக்குளம் துர்கா நகர் குறுக்கு தெருக்களில் நடக்கும் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும். ஒட்டம்பாளையம் வழியாக அரியாங்குப்பம் செல்லும் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே சிறு பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தொகுதி வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது குறித்து, ஆலோசித்தனர். புதுச்சேரி நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் வெங்கடாஜலபதி, இளநிலை பொறியாளர் ஞானசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.