/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசியலமைப்பு நாள் என்.எல்.சி.,யில் அனுசரிப்பு
/
அரசியலமைப்பு நாள் என்.எல்.சி.,யில் அனுசரிப்பு
ADDED : நவ 28, 2024 12:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்வேலி : நெய்வேலி என்.எல்.சி., தலைமை அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு நாள் அனுசரிக்கப்பட்டது.
என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுபள்ளி தலைமை தாங்கினார். மனித வளத்துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப், மின் துறை இயக்குநர் வெங்கடாசலம், என்.எல்.சி., விஜிலென்ஸ் துறை முதன்மை கண்காணிப்பு அதிகாரி அப்பாகண்ணு கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர். அப்போது, சேர்மன் தலைமையில் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில், 'நமது அரசியலமைப்பை அறிந்து கொள்ளுங்கள்' என்ற தலைப்பில், அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைகளை என்.எல்.சி., செயல் இயக்குநர் நாராயணமூர்த்தி விளக்கினார்.