தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இந்திய அரசியலமைப்பு தின உறுதி மொழி ஏற்பு

இந்திய அரசியலமைப்பு தின உறுதி மொழி ஏற்பு

இந்திய அரசியலமைப்பு தின உறுதி மொழி ஏற்பு


ADDED : நவ 27, 2024 04:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2024 04:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அலுவலகத்தில், இந்திய அரசியலமைப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டதை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் நவ., 26ம் தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக, கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று, புதுச்சேரி சட்டசபையில், முதல்வர் அலுவலகத்தில் அரசியலமைப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

முதல்வர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். அமைச்சர் லட்சுமி நாராயணன் அரசியலமைப்பு முகவுரையை வாசித்தார். அமைச்சர் திருமுருகன், சட்ட செயலர் சத்தியமூர்த்தி, வக்கீல்கள், சட்ட மாணவ - மாணவியர் உறுதி ஏற்றுக்கொண்டனர்.

அதேபோல புதுச்சேரி தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலர் சரத் சவுகான், இந்திய அரசியலமைப்பு முகவுரையை வாசிக்க தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அரசுச் செயலர் சுந்தரேசன், முகவுரையை தமிழில் வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us