தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கட்டுமான பொருள், சோலார் கண்காட்சி துவங்கியது

 கட்டுமான பொருள், சோலார் கண்காட்சி துவங்கியது

 கட்டுமான பொருள், சோலார் கண்காட்சி துவங்கியது


ADDED : ஜூன் 13, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2026 06:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் கட்டுமான பொருட்கள் மற்றும் சோலார் கண்காட்சி நேற்று துவங்கியது.

பிசினஸ் இந்தியா எக்ஸ் சிபிஷன் சார்பில், 'கண்ஸ்ட்ரக் டிவ் 2026' என்ற பெயரில் கட்டுமான பொருட் கள், இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் அலங்கரிப்பு, ஹோம் டெக்கர்ஸ் மற்றும் பர்னிச்சர்களுக்கான கண்காட்சி, புதுச்சேரி - கட லுார் சாலை அந்தோணி மஹாலில் நேற்று துவங்கியது.

மேலும், 'ரிசோல் 2026' என்ற சோலார் மற்றும் பேட்டரிஸ் இன்வெர்ட் டர்கள், காற்றாலை மின் சாரம் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கண் காட்சி ஹால் 'பி'யில் உள்ளது. இதில், ஆர்க்கிடெக்குகள், சிவில் இன்ஜினியர்கள், பில்டர்கள், கட்டுமான நிறுவனங்கள், எனர்ஜி கன்சல்டன்ட்கள், எலக்ட்ரிகல் இன்ஜினியர்கள், சோலார் டிஸ்ட்ரிபியூட்டர்கள், அலங்கார நிபுணர்கள் தங்கள் கனவு இல்லம் மற்றும் கட்டடங்களை கட்டுபவர்கள், பழைய கட்டடங்களை புதுப்பிப்பவர்கள்.

வீடு, தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், ரிசார்ட் கள், மால்கள், பள்ளிகள், கல்லுாரிகள் உள்ளிட்ட அனைத்து விதமான கட்ட டங்களில் சோலார் பயன்படுத்தி மின்சாரத்தை தாங்களே உற்பத்தி செய்ய திட்டமிடுபவர்கள், 25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம், மற்றும் 90 சதவீதம் மின் சேமிப்பு பெற விரும்புபவர்களுக்கான பிரத்யேக கண்காட்சி ஆகும்.

கண்காட்சிகளில், கட்டுமான பொருட்கள், டைல்ஸ், சானிடரிவேர், இண்டீரியர், எக்டீரியர், ஸ்டீல்ஸ் மற்றும் சிமென்ட்ஸ் பயோ செப்டிக் டேங்க், கட்டுமான உபகரணங்கள், எலக்ட்ரிகல் வயர்ஸ் மற்றும் கேபிள்ஸ், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீட்டுக் கடன் தரும் வங்கிகள் ஹால் 'ஏ' யில் இடம் பெற்றுள்ளது.

சோலார் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் போன்ற ஸ்டால்கள் ஹால் 'பி' ல் இ டம் பெற்றுள்ளது. கண்காட்சி நேற்று துவங்கி நாளை 14ம் தேதி வரை நடக்கிறது. கண்காட்சியினை காலை 10:30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். அனுமதி இலவசம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us