ADDED : டிச 28, 2024 06:05 AM

புதுச்சேரி; கட்டட வல்லுனர்கள் சங்கம் சார்பில், கட்டுமான பொருட்களின் கண்காட்சி நேற்று துவங்கியது.
புதுச்சேரி ஜெயராம் திருமண நிலையத்தில், கட்டுமான பொருட்கள் கண்காட்சி, கட்டட வல்லுனர்கள் சார்பில், நேற்று துவங்கியது.
கண்காட்சியை நிறுவன தலைவர் செல்வகாந்தி துவக்கி வைத்தார். விழாவில், முன்னாள் தலைவர்கள், சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் டர்ன் கி ஈவன்ட்ஸ் செயல் அதிகாரி ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கண்காட்சியில், வீடு கட்டுவதற்கான அனைத்து விதமான கட்டுமான பொருட்கள் மற்றும் அனைத்து வகையான இன்டிரியல் மாடல்கள், டிசைன், முன்னணி நிறுவனங்களின், பைப்புகள் மற்றும் பிட்டிங்ஸ், தண்ணீர் கான்கள், பாத்ரூம் பொருட்கள், தொடர்பாக ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்கு தேவையான பர்னிச்சர் விற்பனைக்கு உள்ளது. ேஷாபாக்கள், ரிக்லைனர் ேஷாபாக்கள், தேக்கு மரம் ேஷாபாக்கள் மற்றும் ஊஞ்சல், கேரளா நீலாம்பூர் பெட்ரூம் செட்டுகள், டைனிங் டேபிள்கள், மெத்தைகள், ஸ்டீல் பர்னிச்சர், அலங்கார பொருட்கள், மசாஜ் சேர், உடற்பயிற்சி சாதனங்கள், மசாஜர்கள், ஆகியவை சிறந்த தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். கண்காட்சி, நாளை 29ம் தேதி வரை நடக்கிறது. பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.

