/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.1.47 கோடியில் பாதுகாப்பு சுவர் கட்டுமான பணி துவக்கி வைப்பு
/
ரூ.1.47 கோடியில் பாதுகாப்பு சுவர் கட்டுமான பணி துவக்கி வைப்பு
ரூ.1.47 கோடியில் பாதுகாப்பு சுவர் கட்டுமான பணி துவக்கி வைப்பு
ரூ.1.47 கோடியில் பாதுகாப்பு சுவர் கட்டுமான பணி துவக்கி வைப்பு
ADDED : ஜன 13, 2026 06:48 AM

திருபுவனை: புதுச்சேரி செல்லிப்பட்டு ஓடையில் பொதுப்பணி துறையின் சார்பில் ரூ. 1.47 கோடியே 66 ஆயிரம் மதிப்பில் பாதுகாப்பு சுவர் கட்டுமான பணியை எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டத்தின் சார்பில் திருபுவனை தொகுதிக்குட்பட்ட செல்லிப்பட்டு கிராமத்தில்,-திருவண்ணாமலை சாலை,-வழுதாவூர் சாலை நான்கு முனை சந்திப்பில் இருந்து தெற்கே பம்பை ஆற்றங்கரை வரை செல்லும் செல்லிப்பட்டு ஓடையில் ரூ. 1 கோடியே 47 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பில் பாதுகாப்பு சுவர் கட்டுமான பணிக்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது.
திருபுவனை எம்.எல்.ஏ., அங்காளன் தலைமையேற்று பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, நீர்ப்பாசன பிரிவு செயற்பொறியாளர் ராஜ்குமார் உதவி பொறியாளர் மதிவாணன் இளநிலை பொறியாளர் ஹரிராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஒப்பந்ததாரர் பாவாடை ஜே.சி.எம்., மக்கள் மன்ற திருபுவனை தொகுதி தலைவர் ரவிக்குமார் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

