/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிமென்ட் கான்கிரீட் வடிகால் கட்டும் பணி துவக்கம்
/
சிமென்ட் கான்கிரீட் வடிகால் கட்டும் பணி துவக்கம்
ADDED : செப் 19, 2025 03:13 AM

புதுச்சேரி: பொதுப்பணித் துறை மூலம் நைனார்மண்டபம், கடலுார் ரோடு - கணபதி நகர் வரை சிமென்ட் கான்கிரீட் வடிகால் அமைக்கும் பணி துவங்கியது.
முதலியார்பேட்டை தொகுதி, முருங்கம்பாக்கம் ஏரியின் மூன்றாவது மதகு பாசன வாய்க்காலில், பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு மூலம் 1 கோடியே 46 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நைனார்மண்டபம், கடலுார் சாலை - கணபதி நகர் வரை சிமென்ட் கான்கிரீட் வடிகால் அமைக்கும் பணி துவங்கியது.
இப்பணியை தொகுதி எம்.எல்.ஏ., சம்பத் தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் பிரித்திவிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.