/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீர்குளம் சுற்றி வேலி அமைக்கும் பணி
/
நீர்குளம் சுற்றி வேலி அமைக்கும் பணி
ADDED : ஜன 09, 2024 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : கரியமாணிக்கம் நீர்குளம் சுற்றி வேலி அமைத்தல் பணியினை காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., துவக்கி வைத்தார்.
நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம், எம்.பி., நிதி ரூ. 8 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில், கரியமாணிக்கம் கல்குளம் (நீர்குளம்) சுற்றி வேலி அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., கலந்து கொண்டு பணியினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவிப்பொறியாளர் ராமலிங்கேஸ்வரராவ், இளநிலை பொறியாளர் அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.