ADDED : செப் 07, 2026 11:14 PM
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் மின்துறை மூலம் ரூ.78 கோடி மதிப்பீட்டில் நவீன துணை மின் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
இப்பணியினை முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, பூஜை செய்து துவக்கி வைத்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சிவக்கொழுந்து முன்னிலை வகித்தனர்.
விழாவில், செல்வகணபதி எம்.பி., சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் ரமேஷ்குமார், மின்துறை செயலர் முத்தம்மா, கண்காணிப்பு பொறியாளர் கனியமுதன், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த துணை மின் நிலையம், நவீன ஜி.ஐ.எஸ் தொழில் நுட்பத்தை அடிப்படையாக கொண்டு புதுச்சேரியில் முதல் முறையாக அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் முடிவடைந்ததால், லாஸ்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு 8 தனித்தனி மின்பீடர்கள் மூலம் மின்சாரம் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
