/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுாரில் தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்
/
வில்லியனுாரில் தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்
ADDED : ஏப் 16, 2025 10:26 PM

புதுச்சேரி: வில்லியனுார் மாதா கோவில் வீதி, மார்க்கெட் வீதியில் தார்சாலை அமைக்கும் பணியினை எதிர்க்கட்சித் தலைவர் சிவா துவக்கி வைத்தார்.
வில்லியனுார், மாதா கோவில் வீதி, மார்க்கெட் வீதி ஆகிய பகுதிகளில் பொதுப்பணித்துறை மூலம் 35 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமை தாங்கி, தார் சாலை அமைக்கும் பணியினை பூஜை செய்து துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவிப் பொறியாளர் கோபி, இளநிலைப் பொறியாளர் நடராஜன், வில்லியனுார் லுார்து மாதா ஆலய பங்குதந்தை ஆல்பர்ட்,வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், தி.மு.க. தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், அவைத்தலைவர் ஜலால் அணிப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.