/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கட்டட தொழிலாளி சாவு; போலீசார் விசாரணை
/
கட்டட தொழிலாளி சாவு; போலீசார் விசாரணை
ADDED : ஜூன் 11, 2025 07:46 AM
புதுச்சேரி; லாஸ்பேட்டையில் கட்டட தொழிலாளி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், கிளியனுார், தைலாபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 35; கூலி தொழிலாளி. இவருக்கு சீதா என்ற மனைவியும், ஒரு மகன் உள்ளனர். இவர், லாஸ்பேட்டை, புதுப்பேட்டை நடுத்தெருவில் உள்ள ஒரு பழைய வீட்டை இடிப்பதற்கு காண்ட்ராக்ட்டர் மணிகண்டன் என்பவர் மூலம் கடந்த ஒரு வாரமாக, அந்த வீட்டிலேயே தங்கி, வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று அதிகாலை வீட்டின் கீழே மணிகண்டன் தலையில் படுகாயமடைந்த நிலையில், இறந்து கிடப்பதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து, இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மணிகண்டன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
போலீசார் விசாரணையில், மணிகண்டன் வேலை செய்து கொண்டிருந்த வீட்டின் முதல்மாடியில் சாப்பாடு பொட்டலம், மது பாட்டில்கள் இருந்துள்ளது. இதனால், நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து விட்டு, மணிகண்டன் மது அருந்தியபோது, போதையில் மாடியில் கீழே தவறி விழுந்து தலையில் அடிப்பட்டு இறந்ததிருக்கலாம் என, தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.