தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கட்டட தொழிலாளி தவறி விழுந்து சாவு

கட்டட தொழிலாளி தவறி விழுந்து சாவு

கட்டட தொழிலாளி தவறி விழுந்து சாவு


ADDED : நவ 29, 2026 07:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2026 07:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனுார், அரசூர் பேட், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன், 32; சென்ட்ரிங் தொழிலாளி. காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர், இன்று (நவ.,29) அரசூர் பேட், அம்பேத்கர் நகர், 2வது குறுக்கு தெருவில் உள்ள மோகன் என்பரின் வீட்டில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருந்தார்.

காலை 9:30 மணிக்கு வீட்டின் 2வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்த அய்யப்பன், தலையில் படுகாயம் அடைத்தார்.

அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, முதலுதவி அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, டாக்டர் பரிசோதனை செய்து, அய்யப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுவும் வழங்காமலும் வேலை வாங்கியதாக வீட்டின் உரிமையாளர் மோகன் மீது வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us