/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காவேரி மருத்துவமனை டாக்டர் புதுச்சேரியில் ஆலோசனை
/
காவேரி மருத்துவமனை டாக்டர் புதுச்சேரியில் ஆலோசனை
ADDED : செப் 22, 2024 01:39 AM

புதுச்சேரி: சென்னை காவேரி மருத்துவமனையின் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் செல்வின் பிரபாகர் புதுச்சேரியில் மருத்துவ ஆலோசனை வழங்கினார்.
சென்னை ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனையின் டாக்டர் கிரிஷ் ஸ்ரீதர் மருத்துவக் குழுவை சார்ந்த முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் செல்வின் பிரபாகர், நேற்று புதுச்சேரி ரெயின்போ நகரில் செயல்படும் காவேரி மருத்துவமனையின் தகவல் மையத்தில், மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்.
இதில், முதுகு வலி, கால் வலி, பின் கழுத்து மற்றும் கழுத்து பிரச்னைகள், முதுகெலும்பு புற்றுநோய், முதுகெலும்பில் தொற்று, முதுகெலும்பு காசநோய், ஸ்கோலியோசிஸ் மற்றும் அனைத்து முதுகெலும்பு சம்மந்தமான குறைபாடு உள்ளவர்கள் முன்பதிவு செய்து, மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றனர்.