சி.பி.எஸ்.இ.,யில் பிரெஞ்சு மொழி ஆசிரியர்கள் ஆலோசனை
சி.பி.எஸ்.இ.,யில் பிரெஞ்சு மொழி ஆசிரியர்கள் ஆலோசனை
UPDATED : மே 01, 2026 07:27 PM
ADDED : மே 01, 2026 07:24 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் பிரெஞ்சு மொழியை கைவிடாமல் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தொடர்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூட்டம், இ.சி.ஆரில் நடந்தது.
கூட்டத்தில் முன்னாள் புதுச்சேரி பல்கலைக்கழக பிரெஞ்சுத்துறை தலைவர் பன்னீர்செல்வம், தாகூர் கலைக் கல்லுாரி பிரெஞ்சுத் துறை தலைவர் அன்பரசு, புதுச்சேரி பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தலைவர் எட்வர்டு சார்லஸ், பிரெஞ்சு ஆர்வலர் சுவாமி உள்ளிட்ட புதுச்சேரி மற்றும் காரைக்காலை சேர்ந்த பிரெஞ்சு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புதுச்சேரியில் பிரெஞ்சு மொழியை கைவிடாமல் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் சிறப்பு அனுமதி பெற்று தொடர மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கவர்னர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மனு அளிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
இப்பிரச்னையில் விரைந்து நடவடிக்கைகள் எடுக்க புதிய செயற்குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
