/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கலால் துறை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
/
கலால் துறை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 16, 2025 03:10 AM

புதுச்சேரி: புதுச்சேரி கலால் துறை அதிகாரிகள், மதுபான உரிமம் பெற்ற ஓட்டல்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கலால் துறை அலுவலகத்தில் நடந்தது.
கலால் துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் ராஜேஷ்கண்ணா, உதயராஜ், இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வம் உள்ளிட்ட மதுபான உரிமம் பெற்ற ஓட்டல்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கலால் விதிகளில் குறிப்பிட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளை அனைத்து உரிமையாளர்களும் சரியாக கடைபிடிக்க வேண்டும்.
அதற்கேற்றவாறு உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளை அறிவுறுத்த வேண்டும். உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களால் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால், அவற்றை தாங்களே எதிர்கொள்ளாமல், உடனே சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்து சட்டப்படி, அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை மீறும் உரிமையாளர்கள் மீது கலால் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவுறுத்தப்பட்டது.

