நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: ஆதிதிராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் நடந்தது.
தவளக்குப்பத்தில் நடந்த கூட்டத்தில், மாநில தலைவர் அருள்தாஸ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கலைமணி, கவுரவ தலைவர் திருமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுச்சேரியில், அம்பேத்கர் பெயரில் வறுமை ஒழிப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும். வறுமையில் உள்ளவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவர் சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

