
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,பாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதி முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பாஸ்கர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் அ.தி.மு.க., வில்இருந்து விலகுவதாக, பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பினார். அதையடுத்து அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் சன்வே ஓட்டலில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் எதிர்கால அரசியல் நிலவரம் குறித்து ஆதாரவளர்களுடன் கலந்துரையாடினார். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் எடுக்கும் முடிவுக்கு முழு ஆதரவு தருவதாக தெரிவித்தனர்.

