தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/உள்கட்டமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை

உள்கட்டமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை

உள்கட்டமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை


UPDATED : நவ 17, 2026 07:18 PM

ADDED : நவ 17, 2026 07:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 07:18 PM ADDED : நவ 17, 2026 07:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உப்பளம் தொகுதியில் உள்கட்டமைப்பு மேம்படுத்துவது தொடர்பாக பொதுப்பணித்துறை, துறைமுகத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சட்டசபையில் நடந்தது.

தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், துறைமுகத்துறை இயக்குனர் மோகன்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சீனிவாசன், குடிநீர் பிரிவு செயற்பொறியாளர் சுந்தரி, உதவி பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் ராமன், கழிவுநீர் வாய்க்கால் பிரிவு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பொதுப்பணித்துறை, துறைமுகத்துறை அதிகாரிகள் தொகுதியில் உடனே செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அம்பேத்கர் சாலையில் இருந்து தேங்காய் திட்டு செல்லும் சாலையை அகலப்படுத்துவது, பாண்டி மெரினாவிற்கு அம்பேத்கர் சாலையில் இருந்து புதிய சாலை அமைத்தல், வம்பாகீரப்பாளையம் அங்காளம்மன் கோவில், நடுத்தெரு, புதுத்தெரு வரையில் கடற்கரை சாலையை விரிவுபடுத்துதல், உப்பனாறு கழிவுநீர் வாய்க்கால் மீது வாணரப்பேட்டைக்கு தரை பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us