/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மழைக்கால முன்னெச்சரிக்கை அதிகாரிகளுடன் ஆலோசனை
/
மழைக்கால முன்னெச்சரிக்கை அதிகாரிகளுடன் ஆலோசனை
ADDED : செப் 20, 2025 06:59 AM

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் தொகுதியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் உள்ள வாய்கால், ஏரி, குளம் ஆழப்படுத்துதல், துார்வாரும், மதகுகள் சரிசெய்யும் பணிகள் குறித்து துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம், சட்டசபையில் உள்ள துணை சபாநாயகர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், பொதுப்பணித்துறை அதிகாரிகள், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், இளநிலை பொறியாளர், செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.