/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தென் மாநிலங்களுக்கான நுகர்வோர் கருத்து பட்டறை
/
தென் மாநிலங்களுக்கான நுகர்வோர் கருத்து பட்டறை
ADDED : ஜூன் 18, 2025 04:45 AM

புதுச்சேரி: மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில், தென் மாநிலங்களுக்கான நுகர்வோர் பாதுகாப்பு குறித்து கருத்து பட்டறை சென்னை ஆலந்துாரில் நடந்தது.
கருத்து பட்டறை நிகழ்ச்சியில், தமிழ்நாடு நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவுத்துறை செயலர் சத்தியபிரதா சாகு வரவேற்றார்.
மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலர் பாரத்கேரா அறிமுக உரையாற்றினார். கருத்து பட்டறையில் புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கனா, கர்நாடாகா, அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மாநில நுகர்வோர் ஆணையர், தலைவர், உறுப்பினரகள், மாவட்ட தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தேசிய நுகர்வோர் ஆணைய தலைவர் நீதிபதி ஏ.பி.சாகி, மத்திய நுகார்வோர் விவகாரங்கள் துறை செயலர் நிதி கரே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். கருத்து பட்டறையில் புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் ஆணைய
தலைவர் முத்துவேல் கலந்து கொண்டு பேசினார். ஏற்பாடுகளை மத்திய அரசின் நுகர்ேவார் விவகாரங்கள் துறை, தமிழ்நாடு நுகார்வோர் விவாகரங்கள் துறை செய்திருந்தனர்.
மத்திய அரசின் இணை செயலர் அனுபம் மிஸ்ரே நன்றி கூறினார்.