/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்காலில் தொடர் மழை நெற்பயிர்கள் பாதிப்பு
/
காரைக்காலில் தொடர் மழை நெற்பயிர்கள் பாதிப்பு
ADDED : ஜன 20, 2025 06:25 AM

காரைக்கால்: காரைக்காலில் பெய்த தொடர் மழைக்கு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.
காரைக்கால் மாவட்டத்தில் நெடுங்காடு, திருப்பட்டினம், திருநள்ளாறு உள்ளிட்ட பகுதிகளில் 12 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டிருந்தன. பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தத.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாக காரைக்கால் பகுதியில் தொடர் மழை பெய்தது. இதனால், வயல்களில் மழைநீர் தேங்கியது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. இதனால், மகசூல் குறையும் என, விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து காரைக்கால் விவசாயிகள் கூறுகையில், 'ஆறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் திருநள்ளாறு, செல்லுார், தென்னங்குடி, அகலங்கண்ணு, சேத்துார், மூப்பேத்தங்குடி, நெடுங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் அடைந்துள்ளன.
எனவே பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ள நிறுவனத்தின் மூலம் காரைக்கால் மாவட்டத்திற்கு முழுமையாக இன்சூரன்ஸ் கிடைக்க ஏற்பாடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.